Sunday, August 15, 2010

முடிந்தும் தொடரும் முதல் காதல்

காதல் ஓசை

எத்தனையோ முறை முயன்று விட்டேன்
முடியவில்லை. எங்கிருந்து தான்
வந்து தொலை கின்றதோ...
தொலைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
உன் நினைவு



நிலவு

கலைகள் பல கற்றும்
உன் கண்முன் நான்ஏனோ
அமாவாசை நிலவாய்???



கேள்விகுறி

உன்நட்பு காதலற்று நிற்கையில்
என் காதல் நிற்கிறது
கேள்வி குறிக்கு முன்னால்....


விருப்பம்

இணைபிரியாமல் இருக்க நான்
விரும்பினாலும் நீ விரும்புவதென்னவோ
பிரிந்திணையாமல் இருக்க தான்